பல பெண்களுடன் தொடர்பு: ஷமிக்கு பிடிவாரண்ட், மனைவி ஹேப்பி!!

Last Updated: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (15:44 IST)
ஷமிக்கு பிடிவாரண்ட் வழங்கப்பட்டதற்கு அவரது மனைவி ஹசின் ஜஹான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
 
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி கடந்த ஆண்டு பல புகார்களை முன்வைத்தார். குறிப்பாக ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்ப்பு இருப்பதாக புகைப்படங்கள் மற்றும் மெசேஜ்ஜுகளை வெளியிட்டார்.
 
அதோடு இது பற்றி கேட்டால் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்திருந்தார். ஷமி மனைவியின் புகாரை வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரித்து வந்தனர். வழக்கு அலிபூர் நிதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. 
ஆம், ஷமி மற்றும் அவரது சகோதரருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷமி 15 நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த தீர்ப்பு குறித்து ஷமியின் மனைவி தெரிவித்துள்ளதாவது, ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்பதால் அனைவரையும் விட தான் சக்திவாய்ந்தவர் என ஷமி நினைக்கிறார். நீதித்துறை குறித்து பெருமிதம் கொள்கிறேன். ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிக்காக போராடினேன் அதற்கு பலன் கிடைத்துவிட்டது என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :