ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (18:21 IST)

அத்தனைக் கோடிக்கு அவர் வொர்த் இல்லை… கெவின் பீட்டர்சன் கழுவி ஊற்றிய வீரர்!

ராஜஸ்தான் அணியால் 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டவர் கிறிஸ் மோரிஸ்.

பெங்களூர் அணியில் விளையாடிய கிரிஸ் மோரிஸ் ராஜஸ்தான் அணியால் இந்த ஆண்டு 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மோரிஸ் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்கு நல்ல கிராக்கி இருந்தது. இந்நிலையில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள மோரிஸ் பவுலிங்கில் எந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் ஒரு போட்டியில் பேட்டிங்கின் மூலமாக வெற்றியை பெற்றுதந்தார்.

இந்நிலையில் மோரிஸ் பற்றி கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘அத்தனைக் கோடிக்கு தகுதியான வீரர் மோரிஸ் இல்லை. அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு கூட முதல் சாய்ஸாக இல்லை. அவரிடம் நாம் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அவரிடம் எந்த சிறப்பும் இல்லை.’ எனக் கூறியுள்ளார்.