1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (17:42 IST)

கிண்டலுக்கான ஜூலியின் கவர்ச்சி புகைப்படம்!

பிக்பாஸ் புகழ் ஜூலி தனது புதிய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ‘யார்றா இந்த பொன்னு?’ என ஜூலியைப் பார்த்தவர்கள் அதன் பின் பிக்பாஸில் கலந்துகொண்ட போது ‘என்னடா இந்த பொன்னு?’ என ஷாக்காகினர். அந்த அளவு கெட்ட பெயரோடு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜூலி. அதன் பின் சில திரைப்படங்களில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதுவும் ரிலிஸாகவில்லை. சில படங்களில் துக்கடா கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே இப்போது வரைக் கிடைத்துள்ளது. இந்நிலையில் நீண்ட காலமாக சமூகவலைதளங்களில் காணாமல் போன ஜூலி இன்று திடீரென கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் ரசிகர்களின் கேலிக்கு ஆளாகியுள்ளது.