வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (16:53 IST)

கொரோனோவால் பள்ளிகள் மூடல்; ஆடியோ புத்தகங்களை இலவசமாக வழங்கும் அமேசான்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆடியோ புத்தகங்களை இலவசமாக வழங்குவதாக அமேசான் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீடுகளில் பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஏராளமான தலைப்புகளில் பல ஆடியோ புத்தகங்களை இலவசமாக தருவதாக அமேசானின் ஆடிபிள் அறிவித்துள்ளது. ஆங்கிலம் உள்பட 8 இந்திய மொழிகளிலும் கிடைக்கும் இந்த ஆடியோ புத்தகங்களை கணினி, டேப்லெட், மொபைல் எதில் வேண்டுமானாலும் கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.