திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (15:38 IST)

பாராலிம்பிக்ஸ் குண்டு எறிதல் போட்டி.! இந்திய வீரர் சச்சின் கிலாரி வெள்ளி வென்று அசத்தல்.!!

Sachin Gilary
பாராலிம்பிக்ஸ் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
 
பிரான்ஸ் தலைகர் பாரீசில் 17வது பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் இன்று  நடைபெற்ற ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 
F46 பிரிவில் கலந்து கொண்ட அவர்,  16.32 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 

 
இதுவரை இந்திய அணி 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் இந்தியா 19வது இடத்தில் உள்ளது.