வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (08:04 IST)

பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன்!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸில் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் 184 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத் திறனாளி வீர, வீராங்கனைகள் போட்டியிடுகின்றனர்.

இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் 32 பெண் வீராங்கனைகள் உட்பட 84 பேர் கலந்து கொள்கிறார்கள். கடந்த வாரம் இந்த போட்டிகள் தொடங்கிய நிலையில் ஈட்டி எறிதலில் இந்திய வீரரான சுமித் அண்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இது அவரின் மூன்றாவது பாராலிம்பிக் பதக்கமாகும். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு தங்கமும், 2020 ஆம் ஆண்டு வெள்ளியும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.