திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (21:35 IST)

தோனியின் முன் நான் பச்சா தான்: பினிஷிங் பற்றி பாண்டியா!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, தோனியின் முன் நான் இன்னும் பச்சா (குழந்தை) தான் என கூறியுள்ளார். 


 
 
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 
 
இதில் முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளுகும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்த போட்டிகளில் பாண்டியா தனது அபார திறமையை வெளிப்படுத்தினார்.
போட்டி அனுபவம் குறித்து பாண்டியா கூறியதாவது, மைதானத்தில் கடைசி வரை நிற்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.  
 
மூன்றாம் ஒரு நாள் போட்டியில் முன்னதாக களமிறங்குவேன் என எதிர்பார்க்கவில்லை. அதனால் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த விரும்பினேன். தோனியை ஒப்பிடும் போது பினிஷிங் விஷயத்தில் நான் இன்னும் பச்சா தான் என தெரிவித்துள்ளார்.