1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2017 (21:48 IST)

தோனி, கோலி இல்லாதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் வருத்தம்!!

எழு நாட்டு வீரர்களை உள்ளடக்கிய உலக லெவன் அணியில் தோனி மற்றும் கோலி இல்லாததற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


 
 
பாதுகாப்பு அச்சம் காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகின்றன. தற்போது பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை மீண்டும் கொண்டுவர சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
 
அந்த வகையில், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான 7 நாட்டு வீரர்களை உள்ளடக்கிய உலக லெவன் அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவுள்ளனர்.
 
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் உலக லெவன் அணியை வீழ்த்தியது. உலக லெவன் அணியில் சிறந்த வீரர்கள் இல்லாததால் பாகிஸ்தான் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
 
முக்கியமாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான கோலி, டோனி இல்லாதது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.