1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (13:01 IST)

குறைந்த போட்டியில் அதிக ரன்கள்: கோலி புதிய சாதனை!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், குறைந்த போட்டிகளில் விளையாடி அதிக ரன்களை எடுத்து விராட் கோலி புது சாதனை படைத்துள்ளார்.


 
 
நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில், கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று இலங்கை சுற்று பயணத்தை முடித்துக்கொண்டது.
 
இந்நிலையில் நேற்றைய போட்டியில் கோலி ஒரு புது சாதனையை படைத்தார். கோலி 7 ரன்கள் எடுத்த போது இந்த புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.
 
அதாவது, குறைந்த சர்வதேச போட்டிகளில் விளையாடி 15,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கோலி இதுவரை 304 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
 
இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா 336 போட்டிகளில் 15,000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.