வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஜூலை 2023 (17:36 IST)

இந்தியா - பாகிஸ்தான் போட்டியால் விமான டிக்கெட் விலை 5 மடங்கு உயர்வு..!

Flight
இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் தினத்திற்கு முந்தைய நாள் விமான டிக்கெட் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் அக்டோபர் 14ஆம் தேதிக்கான விமான டிக்கெட் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வரை மட்டுமே விமான டிக்கெட்டின் விலை இருக்கும் நிலையில் அக்டோபர் 14ஆம் தேதிக்கு மட்டும் ரூ.22,000 அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்தியா பாகிஸ்தான் மோதலை ஒட்டி தான் மும்பையில் இருந்தும், டெல்லியில் இருந்தும் அகமதாபாத் செல்லும் விமான டிக்கெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva