திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (07:21 IST)

2 வீரர்கள் சதம்.. 448 ரன்கள் குவித்த பாகிஸ்தான்.. முதல் டெஸ்ட்டில் திணறும் வங்கதேசம்

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதில் பாகிஸ்தான் அணியின் இரண்டு வீரர்கள் சதம் அடித்த நிலையில் 6 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்த நிலையில்  டிக்ளேர்   செய்து தகவல் வெளியாகி உள்ளன.

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் கடந்த 21ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி நகரில் தொடங்கியது. இதில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் கேப்டன் மசுத் உள்பட 3 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஆனால் ஷகில் மற்றும்  ரிஸ்வான் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர் என்பதும் ஷகில் 141 ரன்களும், ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்துள்ளனர். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

அதன் பின்னர் வங்கதேச அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் வங்கதேச அணி திணறிய நிலையில் பேட்டிங் சிறப்பாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva