புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 21 மார்ச் 2022 (18:54 IST)

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்தது 
 
இதனை அடுத்து 90 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி நிலையில் நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இன்று முதல்முறையாக முதல் வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது