1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 மார்ச் 2022 (10:54 IST)

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  
 
இதனை அடுத்து 204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட் இழந்த நிலையில் 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த அணி புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போதைய நிலையில் இந்தியா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளை பெற்று உள்ளதால் இந்த மூன்றில் ஒரு அணி மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு செல்லும்