மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 3வது தோல்வி!
கடந்த சில நாட்களாக உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. இந்திய கேப்டன் மிதாலிராஜ் உள்பட இந்தியாவின் மூன்று வீராங்கனைகள் அரைசதம் அடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 278 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 280 எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் லானிங் 97 ரன்கள் அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய தோல்வியுடன் மொத்தம் இந்திய அணி மூன்று தோல்விகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது