புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (09:50 IST)

”கிரிக்கெட் வீரர்களை காப்பாற்றுங்கள்” .. அம்பத்தி ராயுடு வேண்டுகோள்

வருங்கால கிரிக்கெட் வீரர்களை காப்பாற்றுங்கள் என அம்பத்தி ராயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராஃபி, சையத் முஸ்டாக் அலி டிராஃபி ஆகிய போட்டிகளில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தார். உலக கோப்பை போட்டியில் சேர்க்கப்படாத விரக்தியில் எல்லா போட்டிகளிலும் இருந்து ராயுடு ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தாலும், விஜய் ஹசாரே, சையத் முஸ்டாக் அலி டிரோஃபிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் “ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நிறைந்துள்ளது. இப்படி ஊழல்வாதிகள் கிரிக்கெட் சங்கத்தில் நிரம்பியிருந்தால் எப்படி கிரிக்கெட் முன்னேறும்? இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து ராயுடுவின் டிவிட் குறித்து  ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசாருதின் ”ராயுடு மனவிரக்தி அடைந்த வீரர்” என கூறியுள்ளர். அதற்கு பதிலளிக்கும் விதமாக, ”நான் கூறுவதை தனிப்பட்ட பிரச்சனையாக பார்க்க வேண்டாம். அணியில் என்ன நடக்கிறது என நமக்கு தெரியும். வருங்கால கிரிக்கெட் வீரர்களை காப்பாற்றுங்கள் என்பதை தான் நான் கூறவருகிறேன்” என கூறியுள்ளார்.

மேலும் “கிரிக்கெட் அணியில் அரசியல் அதிகாமாக உள்ளதால், ரஞ்சி டிரோஃபியில் ஐதராபாத் சார்பாக நான் விளையாடப்போவதில்லை” எனவும் ராயுடு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.