1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (08:36 IST)

மூன்றாவது இன்னிங்ஸ் வெற்றி! என்ன நடக்குது கிரிக்கெட்டில்?

சர்வதேச அளவில் முக்கிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே தற்போது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருவது தெரிந்ததே. குறிப்பாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயும்,ம் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது 
 
இதில் இந்திய அணி வங்கதேச அணியை இன்னிங்ஸ் வெற்றி பெற்று சாதனை செய்தது. அதேபோல் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி அதிரடியாக சாதனையை செய்தது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிகள் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளது
 
கடந்த 21ஆம் தேதி ஆரம்பித்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 353 ரன்கள் எடுத்தது. அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 615 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது
 
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் தற்போது விளையாடி வரும் இங்கிலாந்து அணி 87 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. இன்னும் 100 ரன்கள் பின்னடைவில் உள்ள நிலையில் கையில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இன்று இந்த போட்டி முடிவுக்கு வந்து, நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றால் இந்த வாரம் மட்டுமே 3 இன்னிங்ஸ் வெற்றி பெறப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது