கொரோனாவால் கிரிக்கெட் வீரர் பலி! ரசிகர்கள் அதிர்ச்சி!

Cricket
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (13:37 IST)
பாகிஸ்தானில் கொரோனா தாக்கத்தினால் பிரபல கிரிக்கெட் வீரர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

1988ம் ஆண்டில் கிரிக்கெட்டில் நுழைந்த சர்ஃபராஸ் 15 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 616 ரன்கள் குவித்தவர். 1994ம் ஆண்டு அனைத்து கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் வெளியேறிய சர்ஃபராஸ் பிறகு அணி பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.

50 வயதான சர்ஃபராஸ் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :