தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியா!
- ஐசிசி-யின் சிறந்த வீரர்களுக்கான பட்டியல் – இறுதிப் பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள்!
- ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா..! டி20 போட்டிகள் இன்று தொடக்கம்..!!
- இந்தியாவை விட்டு போகல.. ரீ எண்ட்ரி கொடுக்கும் முனைப்பில் ஃபோர்டு! – புதிய கார் அறிமுகம்?
- பிரபல ஸ்டண்ட் டைரக்டர் பீட்டர் ஹெயின் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படம் !!
கேப்டவுன் மைதானத்தில் ஷேன் வார்ன் ரெக்கார்டை உடைத்து பும்ரா படைத்த சாதனை!
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வென்றது. இந்த போட்டி இரண்டாவது நாளிலேயே முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக பந்துவீசிய ஜாஸ்ப்ரீத் பும்ரா 8 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன் மூலம் அவர் கேப்டவுன் மைதானத்தில் 18 விக்கெட்களை வீழ்த்தி, ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரரான ஷேன் வார்னின் 17 விக்கெட்கள் மைல்கல் சாதனையை முந்தியுள்ளார். கேப்டவுன் மைதானத்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள் தவிர்த்து அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் பிலித் 25 விக்கெட்கள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 17 விக்கெட்களோடு பும்ராவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.