திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 6 ஜனவரி 2024 (09:05 IST)

தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சிறுவனுக்குப் பரிசளித்து விடையளித்து வெளியேறிய வார்னர்!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த  டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது கடைசி டெஸ்ட்டை சிட்னி மைதானத்தில் விளயாடினார். இந்த போட்டியில் ஆஸி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் வார்னர் 57 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

இதையடுத்து மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் மரியாதை செய்து கட்டியணைத்து வழியனுப்பி வைத்தனர். மைதானத்தில் இருந்த ரசிகர்களும் அவருக்கு கைதட்டி அனுப்ப, பெவிலியன் திரும்பிய அவர் தன்னுடைய ஹெல்மெட் மற்றும் க்ளவுஸ் ஆகியவற்றை ஒரு சிறுவனுக்கு பரிசாகக் கொடுத்துவிட்டு சென்றார். அது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.