பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் அதிரடி சதம்: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முடிவு

Last Modified ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (19:24 IST)
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ராவல்பிண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் இந்த போட்டி டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 11ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் கூட முடியாததால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி டிரா ஆனது என்பது குறிப்பிடதக்கது

பாகிஸ்தானின் அபித் அலி மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் சதம் அடித்தனர் என்பதும், இலங்கையின் டி சில்வா சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அபித் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்ததால் தற்போது 0-0 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் உள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :