இந்திய வீரர்களுக்கு ஆரஞ்சு ஜெர்சி: உலக கோப்பை 2019 அப்டேட்!

Last Updated: திங்கள், 27 மே 2019 (19:22 IST)
இந்திய கிரிக்கெட் அணி நீள நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்திற்கு தனது ஜெர்சியின் கலரை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இன்னும் சில நாட்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்க உள்ள நிலையில் இந்திய அணி போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஐசிசி ஒரே நிறத்திலான சீருடையை இரு அணிகள் அணிந்து விளையாட அனுமதி மறுத்துள்ளது. 
 
எனவே, அனைத்து அணிகளும் பிரதான நிற ஜெர்சியை தவிர்த்து இரண்டாம் நிற தேர்வு ஒன்றை வைத்திருக்க வேண்டுமாம். அந்த வகையில் இந்திய அணி தனது இரண்டாம் நிற தேர்வாக ஆரஞ்சு ஜெர்சியை வைத்துள்ளது. 
 
எனவே இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் விளையாடும் போது ஆரஞ்சு நிற ஜெர்சியை அணிந்து விளையாடும். இதேபோல்தான் மற்ற அணிகளுக்கும். 
 
வரும் உலககோப்பை போட்டியில் இந்திய அணி ஆஃப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியையும், இங்கிலாந்திற்கு எதிரான போட்டியையும் தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளில் நீள நிற ஜெர்சியுடன் விளையாடும். 


இதில் மேலும் படிக்கவும் :