புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 மே 2019 (20:55 IST)

“கனவு பலித்ததே” உற்சாகத்தில் பாண்ட்யா

வரும் 30ம் தேதி இலண்டனில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்தியா அணி லண்டன் சென்றிருக்கிறது.

ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் போன்ற புதிய வீரர்களுக்கு இதுவே அவர்கள் கலந்து கொள்ளும் முதல் உலக கோப்பை. இந்நிலையில் பாண்ட்யா 2011 ல் நடந்த உலக கோப்பையில் இந்தியா வென்றபோது ஒரு ரசிகனாக அதை கொண்டாடிய புகைப்படத்தையும், தற்போது இங்கிலாந்து அணியுடன் பயிற்சியில் இருக்கும் புகைப்படத்தையும் டிவிட்டரில் பகிர்ந்து ”2011ல் ஒரு ரசிகனாய் இருந்தேன். இப்போது ஒரு ப்ளேயராய் அணியில் இருக்கிறேன். எனது கனவு பலித்துவிட்டது” என பதிவிட்டுள்ளார். பாண்ட்யாவின் இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.