முதல் பயிற்சி போட்டியில் தோல்வி! இங்கிலாந்து மண்ணில் சாதிக்குமா இந்தியா?

Last Modified சனி, 25 மே 2019 (22:05 IST)
இன்று நடைபெற்ற உலகக்கோப்பைக்கு முந்தைய பயிற்சி போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள இந்திய அணி பயிற்சி போட்டியில் தோல்வி அடைந்தது கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இன்றைய பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 39.2 ஓவர்கைல் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 180 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் டெய்லர் 71 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்தார். இந்திய தரப்பில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சாஹல், மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்
மீண்டும் இந்திய அணி வரும் 28ஆம் தேதி வங்கதேச அணியுடன் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :