தொடர்புடைய செய்திகள்
- பிரம்மபுத்திராவில் நாங்க அணை கட்டுவதால் இந்தியாவுக்குதான் நல்லது..! - சீனா கொடுத்த பதில்!
- ஜெய்ஸ்வாலின் பேட்டை உடைத்த கிறிஸ் வோக்ஸின் பந்து!
- தொடக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டம்… ரிஷப் பண்ட் வெளியேற்றம்… முதல் நாளில் இந்தியா நிதான ஆட்டம்!
- டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. ஆடும் லெவன் விவரங்கள்..!
- கோலியைக் காப்பி அடிக்கிறார் ஷுப்மன் கில்… முன்னாள் வீரர் விமர்சனம்!
நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் 58 ரன்களும் கே எல் ராகுல் 46 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய சாய் சுதர்சன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பாக்கப்பட்ட கேப்டன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் காலில் அடிபட்டு ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து வெளியேறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்