புதன், 13 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (08:21 IST)

2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பாரீஸ் சிட்டி ஆயத்தம்!

வரும் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்சில் நடக்க உள்ளதை முன்னிட்டு பாரீஸ் சிட்டி ஹாலில் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது. 

 
டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 கோலகலமாக துவங்கியது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்குமு் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி டோக்கியோவில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் முடிவடைந்த நிலையில் ஒலிம்பிக் கொடி பிரான்ஸ் பிரநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
இந்நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்சில் நடக்க உள்ளதை முன்னிட்டு பாரீஸ் சிட்டி ஹாலில் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது. ஒலிம்பிக் கொடியை மேயர் Anne Hidalgo ஏற்றினார்.
 
ஒலிம்பிக்கில் இந்தாண்டு இந்தியாவுக்கு முதல் சில நாட்கள் ஏமாற்றமாக இருந்தாலும், கடைசி சில நாட்கள் பதக்க வேட்டையாக இருந்துள்ளது. இதுவரை மொத்தமாக இந்தியா 7 பதக்கங்களை டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்றுள்ளது.