திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (08:48 IST)

சந்தோஷப்படுவதா? வருத்தப்படுவதா? குழப்பத்தில் உள்ளேன்: பிவி சிந்து

ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் வெண்கலம் வென்ற பிவி சிந்து சந்தோஷப்படுவதா?  அல்லது வருத்தப்படுவதா? என்ற குழப்பத்தில் இருக்கிறேன் என்று பேட்டி அளித்துள்ளார் 
நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மிட்டன் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார். இதனை அடுத்து அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் வெண்கலம் வென்ற பிவி சிந்து பேட்டி அளித்தபோது கடந்த சில ஆண்டு கால கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே இதனை நான் பார்க்கிறேன். ஆனால் அதே நேரத்தில் வெண்கலப்பதக்கம் வென்றதை நினைத்து சந்தோசப்படுவதா அல்லது இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை என்றும் தங்கம் வெல்ல முடியவில்லை என்பதும் வருத்தப்படுவதா? என்ற குழப்பமான மனநிலையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் 
 
இந்தநிலையில் வெள்ளிப்பதக்கம் என்றாலும் இந்தியாவை பொருத்தவரை பிவி சிந்து தங்க மகள் தான் என அவருக்கு பாராட்டுக்கள் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது