வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (19:33 IST)

மேலும் ஒரு பதக்கம் இந்தியாவுக்கு: வெண்கலம் வென்றார் பிவி சிந்து

மேலும் ஒரு பதக்கம் இந்தியாவுக்கு: வெண்கலம் வென்றார் பிவி சிந்து
ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து மூன்றாவது இடத்துக்கான போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது 
 
ஏற்கனவே இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் கற்றுக்கொடுத்து உள்ள பிவி சிந்து தற்போது மீண்டும் பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளதை அடுத்து இந்திய வீராங்கனைகளில் முதல் முறையாக இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று கொடுத்த வீராங்கனை பிவி சிந்து என்ற பெருமையை பெற்றுள்ளார்
 
இதனை அடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில் தற்போது பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரபலம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து பிவி சிந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது பிவி சிந்து சீனா வீராங்கனையை 21-13, 21-15 என்ற நேர் செட்களில் வென்றார்