1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (08:22 IST)

அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஹாக்கி அணிகளுக்கு ஸ்பான்சர் - ஒடிசா அரசு!

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர் தொடரும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. 

 
சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. வெங்கலப் பதக்கத்திற்காக போராடி தோல்வியடைந்தது இந்திய மகளிர் அணி. ஆனாலும், இரு அணிகளில் உள்ள் வீரர், வீராங்கணைகளுக்கும் வாழ்த்துக்களும் பரிசு தொகைகளும் குவிந்தது. 
 
இந்நிலையில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர் தொடரும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. ஆம், 2018 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சராக இருந்துவந்த சஹாரா நிறுவனம் தனது ஸ்பான்சர்ஷிப்பை திரும்பப் பெற்றது. வேறு யாரும் ஸ்பான்சர்ஷிப்புக்கு முன்வரவும் இல்லை.
 
அப்போது தான் ஒடிசா அரசு தலையிட்டு ஹாக்கி இந்தியாவுடன் ரூ.100 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிக்கு ஸ்பான்சராக இருக்க முடிவு செய்தது. தற்போது அடுத்த 10 ஆண்டுகளுக்கும்  ஸ்பான்சர்ஷிப்பை தர முன்வந்துள்ளது.