ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (17:14 IST)

2 தலைகள், 3 கைகளுடன் பிறந்த குழந்தை....

ஒடிஷாவில்  உள்ள தனியார் மருத்துவமனையில் இருதலைகள் மற்றும் மூன்று கைகளுடன் ஒரு பெண்ணுக்கு  குழந்தை பிறந்துள்ளது.

ஒடிஷா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் ஒரே உடலில் இருதலைகள், மற்றும் 3 கைகளுடன் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது.

இந்த செய்தி அப்பகுதியில் பரவவே அப்பகுதியில் உள்ள மக்கள் அங்கு சென்று குழந்தையை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

மருத்துவர்கள் அக்குழந்தை குறித்துப் பேசும்போது,  பெண்ணுக்குப் பிறந்துள்ள குழந்தைக்கு இரு தலைகள் உள்ளதால் இருவாய்களிலும் உணவு உண்கிறது. இரண்டு மூக்குகளும், 3 கைகளும், 2 கால்களும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.