வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (18:14 IST)

10,12ஆம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைத்த 3 மாநிலங்கள்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன
 
அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி பஞ்சாப் ஒடிசா குஜராத் ஆகிய மாநிலங்களில் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
பஞ்சாப் மாநிலத்தில் 5, 8, 10 ஆகிய  வகுப்பு மாணவர்கள் தேர்வு தேர்ச்சி செய்யப்படுவதாகவும் பிளஸ் டூ தேர்வு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார் 
ஒடிசாவிலும் 10 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு ஒத்திவைக்கப்படுவதாக 9 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி ஆல்பாஸ் என்றும் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார் 
 
குஜராத்திலும் 10 12-ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது