புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (22:33 IST)

ஒரே நாளில் இந்தியாவிடம் இரண்டு முறை தோல்வி அடைந்த நியூசிலாந்து!

இன்று ஆக்லாந்தில் நடைபெற்ற டி20 போட்டி ஒன்றில் நியூசிலாந்து அணியை இந்திய அணி அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், 19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. எனவே இன்று ஒரே நாளில் இந்திய அணியும், இந்தியா 19 வயதுக்குட்ட அணியும் நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
50 ஓவர்கள் கொண்ட இந்த போட்டி 21வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் 27 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. அதன்பின் மீண்டும் மழை குறுக்கிட்டதால் 23 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது.
 
எனவே இந்திய அணி 23 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 115 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு 23 ஓவரில் 192 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து அணி 21 ஓவரில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றது