செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 24 ஜனவரி 2020 (16:59 IST)

”இஸ்லாம் நாடு இந்தியா”.. வில்சன் குற்றவாளிகளின் துண்டு சீட்டில் எழுதியிருந்த அதிர்ச்சி செய்தி

எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் கை பையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8 ஆம் தேதி, எஸ் எஸ் ஐ வில்சன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இவ்வழக்கில் அப்துல் சமீம், தவ்பிக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதன் பிறகு இக்கொலைக்கு உதவியவர்களையும் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக குற்றவாளிகள் பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது வில்சனை கொலை செய்யப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குற்றவாளிகள் கேரளாவின் நெய்யாற்றின்கரையை சேர்ந்த ஜாபர் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்த கை பையையும் காவல்துறை பறிமுதல் செய்தனர்.

அந்த பையில் கத்தி மற்றும் மிட்டாய் வாங்கிய ரசீடுடன் ஒரு துண்டுச் சீட்டும் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த துண்டுச் சீட்டில், ”நாங்கள் இஸ்லாமிய போராளிகள், இஸ்லாம் வளரும் வரை நாங்கள் போராடுவோம், ISI இஸ்லாம் நாடு இந்தியா” என எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.