பயிற்சி போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நியூசிலாந்து!

Last Modified சனி, 25 மே 2019 (18:50 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது
இந்த நிலையில் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, தவான் ஆகிய இருவரும் தலா 2 ரன்களில் அவுட்டாகினர். விராத் கோஹ்லி, கே.எல்.ராகுல், தோனி, தினேஷ் கார்த்திக் என முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பினர். இருப்பினும் ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் பொறுப்பாக விளையாடி முறையே 54 மற்றும் 30 ரன்களை எடுத்தனர். முடிவில் இந்திய அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுக்களையும், நீஷம் 3 விக்கெட்டுக்களையும், செளதி, கிராந்தோம், ஃபெர்கஸ்கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது 180 என்ற எளிய இலக்கை நோக்கி நியூசிலாது அணி பேட்டிங் செய்து வருகின்றது

மற்றொரு பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 297 ரன்கள் எடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :