ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (07:17 IST)

இந்த மூன்று மாநிலங்களும் இந்தியாவில் தான் இருக்கின்றதா?

இந்தியா முழுவதும் குறிப்பாக சொன்னால் வட இந்தியாவில் பாஜகவின் செல்வாக்கு முன்பை விட அதிகமாக இருந்ததால் நாடு முழுவதும் அந்த கூட்டணி 350 தொகுதிகளை கைப்பற்றி அசைக்க முடியாத நிலையில் உள்ளது.
 
ஆனால் தமிழகம், ஆந்திரபிரதேசம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெல்லவில்லை. தென்னிந்தியா எப்போதுமே பாஜகவுக்கு எதிராகவே இருந்து வந்தாலும் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாதது ஆச்சரியத்தை அளித்துள்ளது. இவ்வளவிற்கு பிரதமர் மோடியும் அமித்ஷாவும் இந்த மூன்று மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி சூறாவளி பிரச்சாரம் செய்தனர்.
 
இந்தியா முழுவதிலும் உள்ள ஒரு மக்கள் ஒரு கோணத்தில் சிந்தித்தால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரள மக்கள் மட்டும் வித்தியாசமாக சிந்தித்துள்ளனர். எனவே இந்த மூன்று மாநிலங்களும் இந்தியாவில்தான் இருக்கின்றதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
 
படித்தவர்கள், பகுத்தறிவாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் என்பதால் இந்த மூன்று மாநில மக்களும் வித்தியாசமாக சிந்தித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.