சொந்த மண்ணில் இலங்கை இன்னிங்ஸ் தோல்வி: நியூசிலாந்து அபார வெற்றி!

Last Modified திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (19:49 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் கடந்த 22ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து, முதல் இன்னிங்சில் 244 ரன்களில் ஆட்டமிழந்தது. டீ சில்வா 109 ரன்களும் கருணரத்னே 65 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி அபாரமாக பேட்டிங் செய்தது லாதம் மற்றும் வாட்லிங் ஆகியோர்களின் அபார சதத்தால் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 431 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 122 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணி சொந்த மண்ணில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக லாதம் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :