வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (09:31 IST)

டிரம்ப்பை பங்கமாய் கலாய்த்த இங்கிலாந்து ராணி.. என்ன காரணம்?

டிரம்ப்பை பங்கமாய் கலாய்த்த இங்கிலாந்து ராணி.. என்ன காரணம்?
தன்னுடைய அரண்மனையை பாழாக்கிவிட்டதாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நகைச்சுவையாக புகார் அளித்துள்ளார். என்ன காரணம்??

கடந்த ஜூன் மாதம் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் இங்கிலாந்துக்கு அரச பயணமாக சென்றார், அப்போது டிரம்ப் வந்த ஹெலிகாப்டர் ஒரே நாளில் 2 முறை பங்கிங்காம் அரண்மனை அருகே தரையிறங்கியது. இதனால் அந்த அரண்மனையின்  முன் உள்ள புல்வெளியில் ஆழமான தடயங்களை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப்பை பங்கமாய் கலாய்த்த இங்கிலாந்து ராணி.. என்ன காரணம்?

இந்நிலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார் மாரிசனை சந்தித்தபோது, ”என் புல்வெளியை பாருங்கள், எவ்வளவு பாழாகிகிடக்கிறது. இதற்கு அந்த டிரம்ப் தான் காரணம்” என டிரம்ப்பை கேலி செய்துள்ளார். இந்த தகவலை ஸ்காட் மாரிசன் வெளியிட்டுள்ளார்.
டிரம்ப்பை பங்கமாய் கலாய்த்த இங்கிலாந்து ராணி.. என்ன காரணம்?

இனவாதம் குறித்து கருத்து தெரிவித்து, அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் டிரம்ப், இங்கிலாந்துக்கு வருகை புரிந்தபோது, ஆயிரக்கணக்கானோர் அவர் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.