ஜோப்ரா ஆர்ச்சர் பயங்கரம் – ஆஸியை 179 ரன்னில் சுருட்டிய இங்கிலாந்து !

Last Modified வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (11:12 IST)
ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இரண்டு டெஸ்ட்கள் முடிந்துள்ள நிலையில் 1-0 என்ற கணக்கில் ஆஸி முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று ஆஸீயை பேட் செய்ய அழைத்தது. மோசமான வானிலைக் காரணமாக போட்டி தாமதமாகத் தொடங்கியது. அதையடுத்து களமிறங்கிய ஆஸி அணியில் வார்னர் மற்றும் லபூஸ்சேச்னே ஆகியோர் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். வார்னர் 61 ரன்களும், லபூஸ்சேச்னே 71 ரன்களும் சேர்த்தனர். இதனால் ஆட்டமுடிவில் ஆஸி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிகபட்சமாக 6 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். ஆஸி அணியில் ஸ்மித் இல்லாதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவானது.இதில் மேலும் படிக்கவும் :