திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2020 (11:40 IST)

இந்திய பேட்ஸ்மேன்களையே தடுமாற வைத்த நடராஜன் – சீக்கிரமே டெஸ்ட்டிலும் இடம் உண்டு!

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன் தற்போது டெஸ்ட் அணி வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய நடராஜன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனது இடத்தை நிரந்தரமாக்கியுள்ளார். இந்நிலையில் அவரை இப்போது டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சியின் பந்து வீசி வருகிறார் நட்டு.

அப்படி வலைப்பயிற்சியின் போது நட்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரை தடுமாற செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் யார்க்கர் மட்டுமே அவருக்கு வீசத்தெரியும் என்ற விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக அனைத்து விதமான பந்துகளையும் வீசி முன்னேற்றம் கண்டு வருகிறாராம். அதனால் அவருக்கு சீக்கிரெமே டெஸ்ட் அணியிலும் இடம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.