கர்ணன் படத்தின் ஓடும் நேரத்தை குறைக்க சொல்லி கோரிக்கை… தயாரிப்பாளர் தரப்பு பதில்!

Last Modified வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:41 IST)

இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் இரவுக்காட்சி ஓட்ட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் இரவு ஊரடங்கும் ஞாயிறு முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் இரவு காட்சி மற்றும் ஞாயிறு காட்சிகள் இல்லாததால் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் வார நாட்களில் நான்கு காட்சிகளை ஓட்ட வேண்டுமென்றால் படங்கள் 2 மணி நேரத்துக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இது சம்மந்தமாக கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம் படத்தை 2 மணீ நேரத்துக்கு சுருக்கி தருமாறு திரையரங்க உரிமையாளர்கள் கேட்டுள்ளதாகவும், ஆனால் அது இயலாத காரியம் என்று அவர் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :