வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (07:19 IST)

ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்: முதல் போட்டியில் வெல்வது யார்?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஐபிஎல் திருவிழா இன்று முதல் தொடங்க உள்ளது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி ஆரம்பமாகிறது 
 
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி வெல்லுமா? அல்லது விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
 
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி முடிவடைந்து ஐந்து மாதங்கள் ஆகி உள்ளது என்பதும் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி மும்பை அணி இந்த ஆண்டும் பட்டம் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் அந்த அணியின் குவின்டன் டி காக் தற்போது தனிமைப்படுத்துதலில் இருப்பதால் ஒரு சிறிய பின்னடைவு என்றும் இருப்பினும் மும்பை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் இருப்பதால் மும்பை அணி வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது