செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (13:16 IST)

இந்தி நடிகை மாடியிலிருந்து குதித்து தற்கொலை – மும்பையில் அதிர்ச்சி

இந்தி திரைப்பட நடிகை ஒருவர் மன உளைச்சலால் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள தன் வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியபடி சினிமா வாய்ப்புகளை தேடி வந்தவர் பெர்ல் பஞ்சாபி. ஒருசில திரைப்படங்களில் சின்னதாக கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான பெர்ல் தனது குடியிருப்பின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெர்ல் பஞ்சாபி ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.