1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: வியாழன், 25 மே 2023 (07:10 IST)

பரிதாபமாக தோல்வி அடைந்த லக்னோ.. குவாலிஃபையர் 2க்கு தகுதி பெற்றது மும்பை..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதிய நிலையில் மும்பை அணி அபார வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்தது. கிரீன் 41 ரன்கள் சூர்யாக்குமார் யாதவ் 33 ரன்கள் எடுத்தனர். 
 
இந்த நிலையில் 183 என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் மும்பை 81 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து லக்னோ அணி குவாலிஃபயர் 2 செல்லும் வாய்ப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் குவாலிஃபயர் 2 போட்டியில் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva