1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified புதன், 24 மே 2023 (19:06 IST)

எலிமினேட்டர் சுற்று: டாஸ் வென்ற மும்பை அணி எடுத்த அதிரடி முடிவு..!

Rohit sharma
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன. 
 
இந்த போட்டியில் வெல்லும் அணி நாளை மறுநாள் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இன்று லக்னோ அணியுடன் மோதுகிறது. லக்னோ அணியை இதுவரை மும்பை வென்றதில்லை என்ற வரலாறு இன்று உடைக்கப்படுமா? அல்லது லக்னோ மீண்டும் வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
 
 இந்த நிலையில் இன்று டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் எடுத்துள்ளார். இதனை அடுத்து மும்பை அணி பேட்ஸ்மேன்கள் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran