ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 7 மே 2022 (07:32 IST)

கடைசி ஓவரில் கோட்டைவிட்ட குஜராத்: மும்பைக்கு 2வது வெற்றி!

MI vs GTT
கடைசி ஓவரில் கோட்டைவிட்ட குஜராத்: மும்பைக்கு 2வது வெற்றி!
நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் 11 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்த நிலையில் 3 ரன்கள் மட்டுமே அடித்து குஜராத் அணி வெற்றியை கோட்டை விட்டது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் அடித்தது. இஷான் கிஷான், ரோகித் சர்மா மற்றும் டிம் டேவிட் ஆகியோர் 40க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்தனர் 
 
இதனை அடுத்து 178 என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சாஹா மற்றும் கில் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்
 
இருப்பினும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உள்பட அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து குஜராத் அணி தோல்வி அடைந்தது
 
நேற்றைய வெற்றியை அடுத்து மும்பை அணி புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் பெற்றிருந்த போதிலும் கடைசி இடத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது