ஐபிஎல் 2022-; குஜராத் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்தார்.
எனவே, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.
இதில், குஜராத் அணி மும்பை அணியில் கிஷான்45 ரன்களும், ரோஹித் சர்மா 43 ரன்களும், யாதவ்13 ரன்களும், வர்மா 21 ரன்களும், அடித்தனர்.
எனவே 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்த மும்பை அணி குஜராத் அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.