வியாழன், 11 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (15:47 IST)

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!
2025ல் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே. அணி மோசமான தோல்விகளை சந்தித்தது. இந்த நிலையில், சி.எஸ்.கே-வின் கேப்டன் எம்.எஸ்.தோனி, அணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியுள்ளார். காயம் காரணமாக விலகிய ருதுராஜ் கெய்க்வாடின் வருகை, அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
"கடந்த சீசனில் பேட்டிங் வரிசை ஒரு குறையாக இருந்தது. ஆனால், காயம் காரணமாக விலகிய ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த சீசனில் திரும்புவதால், அந்த பிரச்சினை தீர்ந்துவிடும்" என்று தோனி கூறினார்.
 
சிஎஸ்கே அணி தளர்ந்து போய்விட்டது என்று நான் கூற மாட்டேன். ஆனால், சில குறைபாடுகளை சரிசெய்ய வேண்டியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மினி ஏலத்தில், அந்த குறைகளை சரிசெய்வோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஒவ்வொரு மோசமான சீசனிலும், நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பதுதான் முக்கியம். குறைகளை கண்டறிந்து, அதை சரிசெய்வதன் மூலம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்று தோனி நம்பிக்கை அளித்தார்.
 
கடந்த இரண்டு சீசன்களாக சி.எஸ்.கே. அணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva