ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2016 (12:19 IST)

சென்னையில் போக்ஸ்வேகன் வென்டோ கோப்பை மோட்டார் ரேஸ்

எம்எம்ஆர்டி எனப்படும் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில், போக்ஸ்வேகன் வென்டோ கோப்பை மோட்டார் ரேஸ் தென்மாநில மோட்டார் பந்தய வீரர்கள் மகிழ்ச்சி.




ஆண்டுதோறும் ஃபோக்ஸ்வேகன் வென்டோ கோப்பை மோட்டார் ரேஸ் போட்டிகள் பெரும்பாலும் நொய்டா பந்தய டிராக்குகளில்தான் நடத்தப்படுகின்றன. ஆனால் இம்முறை சென்னையில் நடைபெற இருக்கிறது.

எம்எம்ஆர்டி எனப்படும் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கோப்பை போட்டிகள் நடைபெறாமல் இருந்தன. அந்தக் குறையைப் போகும் வகையில் சென்னையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று பந்தயங்கள் நடைபெற உள்ளன.

மொத்தம் 3.71 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த டிராக், 11 மீட்டர் அகலமும், 12 வளைவுகளையும் கொண்டது. இந்த டிராக்கில் மொத்தமாக மூன்று நேர் பாதைகள் உள்ளன. அதில் அதிகபட்சமான நேர் பாதை 250 மீட்டர் தொலைவு கொண்டதாகும். இதைத்தவிர, 2.1 கிலோ மீட்டர் தொலைவுடைய சிறிய டிராக்கும் எம்எம்ஆர்டியில் உள்ளது.

இதற்கு முன்னாள், இரண்டாம் சுற்றிற்கு தேர்வான வீரர்கள் யாரும் எம்எம்ஆர்டி டிராக்கில் வாகனத்தை ஓட்டியதில்லை. எனவே, அவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

சென்னையில் ரேஸ் நடைபெருவது தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மோட்டார் பந்தய வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறுதிச் சுற்று நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேசனல் சர்க்கியூட் எனப்படும் ஃபார்முலா-1 பந்தய டிராக்கில் நடைபெற உள்ளது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்