வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:07 IST)

மின்சார வேலியில் சிக்கி ஆண்யானை பலி – நில உரிமையாளர் கைது!

கோவை மாவட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி ஆண் யானை ஒன்று பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட செம்மேடு என்ற கிராமப்பகுதியில் ஆறுமுகம் என்பவரின் நெல்வயல் இருந்துள்ளது. அந்த வயலில் வன விலங்குகள் நுழைவதைத் தடுக்கும் விதமாக இரும்பு வேலி அமைத்துள்ளார் அவர்.  அந்த வேலியில் உள்ள இரும்புக் கம்பிகளில் திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து அதில் செலுத்தியுள்ளார்.

அப்போது அந்த பகுதிக்கு வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண்யானை அந்த கம்பிக்குள் சிக்கி உயிரிழந்துள்ளது. இதையறிந்த ஆறுமுகம் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். ஆண் யானை இறந்தது சம்மந்தமாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்து விசாரணை நடத்திய அவர்கள் தலைமறைவான ஆறுமுகத்தைத் தேடி வருகின்றனர்.