1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:54 IST)

சிராஜை பார்த்ததும் கதறி அழுத தாய்!

இந்திய வீரர் முகமது சிராஜ் ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் இந்தியா வந்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது போட்டி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர் சிராஜ் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். முதல் இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காத நிலையில் சிராஜ் சிறப்பாக பந்துவீசியது ஆஸ்திரேலியாவை பெரிய ஸ்கோர் எட்டமுடியாமல் தடுத்ததற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது. அதற்கு தன் தாயாரிடம் பேசியதுதான் மனதளவில் உதவியது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் தொடரை வென்று இந்திய திரும்பிய சிராஜ் தனது தந்தையின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பிய அவரைப் பார்த்ததும் அவரின் தாயார் கதறி அழுதது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.