தாய்லாந்து ஓபன்: ஜொலிப்பார்களா இந்திய வீரர்கள்!!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2021 (09:44 IST)
தாய்லாந்து ஓபன் போட்டி அதே பாங்காக் நகரில் இன்று தொடங்கி 24 ஆம் தேதி வரை நடக்கிறது. 

 
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் விளையாடுவதற்காக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிவி சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் பாங்காங் சென்றுள்ளனர். கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுடன் போட்டிகள் நடத்தப்படுகிறது. 
 
இதில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில் மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 2வது சுற்றுடன் வெளியேறினார். 
 
இந்நிலையில், மீண்டும் தாய்லாந்து ஓபன் போட்டி அதே பாங்காக் நகரில் இன்று தொடங்கி 24 ஆம் தேதி வரை நடக்கிறது. ஆண்கள் ஒற்றையரில் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், பிரனாய் காஷ்யப், சவுரப் வர்மா, சமீர் வர்மா ஆகிய இந்திய வீரர்கள் களம் காணுகிறார்கள். பெண்களுக்கான போட்டியில் பி.வி.சிந்து, சாய்னா நெய்வால் ஆகியோர் போட்டியிடுக்கின்றனர். 
 
கடந்த தோல்வியை மறந்து இந்திய வீரர்கள் வீறுகொண்டு இந்த போட்டியை எதிர்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இரண்டாவது ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :